திருச்சி: திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள், சென்னை அண்ணா பல்கலையோடு இணைக்கப்பட்டது என்று அரசு அறிவிக்கப்பட்ட நேரத்தில், திருச்சி அண்ணா பல்கலையில், பேராசிரியை ஒருவர் முனைவர் பட்டம் வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, சென்னை அண்ணா பல்கலையில் இருந்து பிரித்து, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் துவங்கப்பட்டன.துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் குறுக்கீடு, குறுநில மன்னர்கள் போல துணைவேந்தர்களின் செயல்பாட்டினால் பல்கலைகளில் மாணவர்களின் கல்வித்தரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், துணைவேந்தர்கள் லட்சக்கணக்கில், "பணப்பயன்' அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தி.மு.க., ஆசி பெற்ற துணைவேந்தர்கள் என்பதால், கடந்த ஆட்சியில் கடுகளவு கூட நடவடிக்கை இல்லை.அதை கருத்தில் கொண்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி அண்ணா பல்கலைகளை கலைத்துள்ளது. பழையபடி சென்னை அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் என்று அறிவித்தது.கவர்னர் அறிவிக்கும் முன்னரே இந்த தகவல் வெளியில் கசிந்தது. அதன்பிறகு, துணைவேந்தர்கள் மற்றும் அவர்களது அடிப்பொடிகள், தங்களது, "காரியங்களை' அவசர, அவசரமாக நிறைவேற்றிக் கொண்டனர்.திருச்சி அண்ணா பல்கலை பொறுத்தவரை, ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பொன்மகள், நேற்றுமுன்தினம் கவர்னர் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன், முனைவர் பட்டம் பெற்றார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி பேராசிரியர் லோகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டி, இவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினர்.திருச்சி அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:துணைவேந்தருக்கு வலது, இடதுகரமாக செயல்படுபவர்களை எளிதாக முனைவர் பட்டம் கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் சிறந்த உதாரணம். நான்கு மாதத்துக்கு முன் சென்னை அண்ணா பல்கலையில், பொன்மகளின் முனைவர் பட்டம் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டது."ஒரு பல்கலையில் நிராகரிக்கப்பட்டவருக்கு, மற்றொரு பல்கலையில் முனைவர் பட்டம் வழங்கப்படக்கூடாது' என்பது கல்வி நிலைக்குழுவின் விதிமுறை.விதிமுறைகளை மீறி, துணைவேந்தரின் ஆசியோடு சட்டமீறல்களை செய்து மீண்டும் திருச்சி அண்ணா பல்கலையில் முனைவர் பட்டத்துக்கு பொன்மகள் விண்ணப்பித்துள்ளார்."சிரமப்படாமல்' முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதேபோல, பண்ருட்டி உறுப்புக் கல்லூரியை சேர்ந்த, துணைவேந்தரின் பி.ஏ., வெங்கடேசன், கடந்த 9ம் தேதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.வரும் 14ம் தேதி, பல்கலை தேர்வு நெறியாளரின் மனைவி வைஷ்ணவி, முனைவர் பட்டம் பெறவிருக்கிறார். இதுபோன்று தகுதியில்லாதவர்கள் எல்லாம் முனைவர் பட்டம் பெற்றால் மாணவர்கள் கல்வித்தரம் எப்படியிருக்கும்?எனவே, திருச்சி அண்ணா பல்கலையில் வழங்கப்பட்ட, வழங்கப்பட உள்ள முனைவர் பட்டங்கள் குறித்து தமிழக அரசு முழு அளவில் விசாரணை நடத்தி, உண்மையை வெளி கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பொன்மகளிடம் கேட்டபோது, ""நான் பி.ஹெச்டி., முடித்ததை பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தகவல் வேண்டுமானால் என்னிடம் நேரில் வந்து கேளுங்கள்,'' என்று கூறி மொபைல் ஃபோன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
அண்ணா பல்கலை மீது அடுக்கடுக்கான புகார்கள் : திருச்சி அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், கிளார்க் உட்பட ஆசிரியர் அல்லாத, 200 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை, பணி நிரந்தரம் செய்ய ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், பணம் கொடுக்காத, 20 பேரை பணி நீக்கம் செய்தும், இதுகுறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்பட்டதுமே புகாருக்கு அத்தாட்சியானது.
அண்ணா பல்கலை மீது அடுக்கடுக்கான புகார்கள் : திருச்சி அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், கிளார்க் உட்பட ஆசிரியர் அல்லாத, 200 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை, பணி நிரந்தரம் செய்ய ஐந்து முதல் எட்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், பணம் கொடுக்காத, 20 பேரை பணி நீக்கம் செய்தும், இதுகுறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளப்பட்டதுமே புகாருக்கு அத்தாட்சியானது.
No comments:
Post a Comment
Set all books on fire because no knowledge in them can be repeated and no knowledge in them should be repeated. Do not listen to your teachers or pastors, or mom and dad because none of their knowledge can be repeated and none of their knowledge should be repeated. But, do not forget to buy our books because we need your money. Do not forget to send your children to our schools and colleges, because we need your money. Listen to us, because we want you and your children to be our employees, slaves.